திருப்பத்தூர் வட்டார வள மையம் சார்பாக 37 மையங்களில் வயதுவந்த கற்போர்களுக்கு எழுதப் படிக்க மற்றும் கணிதப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இம் மையங்களில் பணிபுரியும் 37 தன்னார்வலர்களுக்கு இன்றைய தினம்( 02.03.2023) திறன் மேம்பாட்டு பயிற்சி திருப்பத்தூர் வட்டாரத்தில் நடத்தப்பட்டது. பயிற்சியினை துவங்கி வைத்து மேற்பார்வையாளர் (பொ) அலுவலர் திருமதி. அழகுராணி அவர்கள் மையங்களின் செயல்பாடுகள் குறித்து பேசினார். மேலும் அவர் பேசுகையில், மையங்களை சிறப்பாக நடத்தி கற்போர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சிறப்பு அழைப்பாளராக நெற்குப்பை வட்டார மருத்துவர் திருமதி. இலையதனா அவர்கள் கலந்துகொண்டு மருத்துவ துறையில் அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மருந்தாளுணர் வெற்றிவேல் பாண்டிமணி, செவிலியர் சுகந்தி ஆகியோர் கிராமப்புற மருத்துவ திட்டம், மக்களை தேடி மருத்துவம் குறித்து விளக்கினர். மகளிர் குழு திட்ட மேலாளர் திருமதி. ராதா அவர்கள் மகளிர்க்கு சுய உதவி குழு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், உதவிகள், மானியம் குறித்து விளக்கினார். அஞ்சலக துறை முகவர் திருமதி. சண்முகபிரியா அவர்கள் அஞ்சலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்கள், வழங்கப்படும் சலுகைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். ஆசிரிய பயிற்றுநர் திருமதி ராணி செந்தாமரை கலந்துகொண்டு பெண் கல்வியின் முக்கியத்துவம், சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களும் அதற்கான சட்ட தீர்வு குறித்து விரிவாக பேசினார். மேலும், ஊக்கம், கடின உழைப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வே பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் என்று இயம்பினார்.
பயிற்சிக்கான ஏற்பாட்டினை வட்டார வர மைய மேற்பார்வையாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர் பயிற்றுநர்கள் முனியப்பன், தனபாண்டி, ஈஸ்வரி, ரத்னபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

0 Comments