நாகை அருகே பயன்பாடற்ற நிலையிலிருந்த பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்து ஓவியம் வரைந்து அழகுப்படுத்தி அசத்திய பெண்களுக்கு குவியும் பாராட்டுக்கள்

பொதுவாக பெண்கள் என்றாலே தன்னை அழகு படுத்திக் கொள்வதற்கு பலவித யுக்திகளை கையாள்வது பொதுவான கருத்து. அதனை மாற்றும்  வகையில், பயன்பாடற்ற நிலையில் இருந்த பேருந்து நிலையத்தை அழகுப்படுத்தி அசத்திய பெண்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

பெண்கள் பலரும் தன்னை அழகு படுத்திக் கொண்டு மகளிர் தினத்தை கொண்டாடிய சூழலில், நாகை மாவட்டம் காமேஸ்வரம் அடுத்த தண்ணீர் பந்தலில் பயன்பாடற்ற நிலையில் இருந்த பேருந்து நிறுத்தத்தை  அழகுப்படுத்தும் நோக்கில்   களம் இறங்கினர்.பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்து,அதற்கு வர்ணங்கள் பூசியும் , மேலும் அழகு சேர்க்கும் விதமாக அழகிய பூக்கள் வரைந்து அசத்தினர்.அதோடு மட்டுமின்றி   காவல்,தீயணைப்பு குழந்தைகளான அவசர  உதவி எண்கள் உள்ளிட்ட முக்கிய இலவச உதவி எண்களை  மனமகிழ் செய்யும் அழகிய வாசகங்களையும் எழுதி மகளிர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தது பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. 

மகளிர் தின கொண்டாட்டத்தில் வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, கீழையூர் ஒன்றிய துணைத் தலைவர் சௌரிராஜன், காமேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா கணேசன், கீழையூர் காவல் ஆய்வாளர் ரேவதி, வாடு உறுப்பினர்கள் ஆஷா அருள் செல்வன், விஜயகுமாரி, பத்மா ரஞ்சித், ஜெயலட்சுமி, மற்றும் உதவும் நண்பர்கள் தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.நாகை அருகே பொதுவான சிந்தனையோடு பேருந்து நிறுத்தத்தை சுத்தப்படுத்தி மகளிர் தினத்தை பெண்கள் கொண்டாடிய நிகழ்வினை பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Post a Comment

0 Comments