தேனி சாலை விபத்தில் கால்களை இழந்த நபருக்கு இழப்பீடு வழங்காததால் தேனி புதிய பேருந்து நிலையத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு பேருந்து ஜப்தி

 

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் 52 வயதான ஆறுமுகம்,  அப்பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வந்துள்ளார் . இவர் கடந்த 20.2.2016 அன்று  பி.சி.பட்டி பகுதியில் இருந்து தேனியை நோக்கி அவரது  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஆறுமுகம்  சென்ற  இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில், ஆறுமுகம் இரண்டு கால்களும்  செயலிழந்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக தேனி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த  30 .11.2021 அன்று  ஆறுமுகம் என்பவருக்கு நீதிமன்றம் 39. 05 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காமல் இருந்து வந்ததை அடுத்து நீதிமன்றம் இழப்பீடு  நிறைவேற்றும் மனம் சார்பாக TN 57 N 2227 பதிவெண் கொண்ட அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள்  இன்று தேனி புதிய பேருந்து நிலையத்தில் ஐப்தி செய்தனர்.

Post a Comment

0 Comments