திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அக்கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில தலைவர் ராமஅரவிந்தனோடு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக கல்லூரிக்கு வந்துள்ளனர். அப்போது நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையேஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இதில் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநிலத் தலைவர் ராமஅரவிந்தன் தாக்கப்பட்டார். அவரது வாகனமும் தாக்குதலுக்குள்ளானது.
இதனையடுத்து மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ராம அரவிந்தன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் திமுக,நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




0 Comments