விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில்  சத்தியமங்கலத்தில் 10  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட அவைத் தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் மகேந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற தொடர் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது, கிராமங்கள் தோறும் கிளைகள் அமைப்பது, உழவர் பெருமக்களை சாதி மதம் அரசியல் கடந்து ஒன்றிணைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் விவசாயிகள் செய்திருந்தனர். இந்த கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments