பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிழற்குடை அமைத்து தர கோரிக்கை
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறை அலுவலகங்கள்,சார் ஆட்சியர் குடியிருப்பு,நீதிமன்ற கட்டிடங்கள்,கருவூலம்,கிளைச் சிறை,போக்குவரத்து காவல் நிலையம்,பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பு என அரசு அலுவலகங்கள் அருகருகே அமைந்துள்ளனர்.பல்வேறு பணி நிமித்தமாக பெரிய குளம் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள பொதுமக்கள் அமரும் நிழற்குடை சேதமடைந்துசெடி கொடிகள் வளர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பயன்படுத்தப்பட முடியாத சூழல் உள்ளது.மேலும் வட்டாட்சியர் அலுவலக வளாகப் பின்புறம் உள்ள பொதுக்கழிப்பிடமானது பயன்பாடு இன்றி செடி கொடிகள் படர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.இதனால் பல்வேறு விதமான தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.ஆகவே மாவட்ட நிர்வாகம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் அமரவும் வகையில் நிழற்குடையும்,சுற்றுச்சுவரம் அமைத்து தர வேண்டும் எனவும் பொதுக்கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முறையாக பராமரிக்க வேண்டும் எனவும்,வட்டாட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் பெரியகுளம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments