• Breaking News

    ஆவியூர் பகுதியில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு விமரிசையாக நடைபெற்ற ஜல்லிகட்டு


    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் அருள்மிகு ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக்கோவில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. 

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன் லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு 700 காளைகள் பங்கேற்றன. மேலும் 400 மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் மாடுகளைப் பிடிக்கும் முயற்சியில் களத்தில் இறங்கினர். 

    முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக துள்ளிப் பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டிக்கொண்டு அடக்க முயன்றனர். 

    வீரர்களுக்கு அடங்காமல் துள்ளி குதித்து ஓடிய காளைகளுக்கும், துள்ளி வரும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், தங்க நாணயங்கள், மிக்சி குக்கர், அண்டா,பீரோ, வெள்ளி நாணயங்கள், மிக்சி, குக்கர், பைக்குகள் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் வீரர்கள் காயமடைந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவகுழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். போட்டியைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மேலும் மாவட்ட எஸ்பி தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    No comments