அறந்தாங்கி தாலுகா மேனக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மேனக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சிவ.வீ மெய்யநாதனிடம் மேனக்காடு தலைமை ஆசிரியர் கூடுதலாக வகுப்பறை வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
கோரிக்கையின் அடிப்படையில் விரைவில் மேனக்காடு பள்ளியில் கூடுதலாக வகுப்பறைகள் அமைக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் மற்றும் ஒன்றிய துணை பெருந்தலைவர் பொன் கணேசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுமதி முத்து, மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments