• Breaking News

    பெரியகுளம் கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு வனச்சரகர் டேவிட் ராஜன் தகவல்


    தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் கும்பக்கரை அருவி பெரியகுளத்தில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கும்பக்கரை அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் பெய்கிற மழைநீர் சிறு சிறு ஓடைகள் வழியாக வழிந்தோடி கும்பக்கரை அருவியை வந்தடைகிறது.

     இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சீராகவே இருந்து வந்தது இந்நிலையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் திடீர் கனமழை பெய்ததால்  கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

     இந்நிலையில் கும்பக்கரை அருவியில் குளித்த  சுற்றுலாப் பயணிகளை  வனத்துறையினர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே அனைவரும் அறிவிய விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி வந்தனர் இந்நிலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்  சுற்றுலாப் பயணிகளை அருவியின் இரு பகுதியும் பிரித்து பாதுகாப்பாக நிறுத்தி வெள்ளம் பெருக்கு சீரானதும் அருவியின் மறுபக்கம் இருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்து வந்து அவரவர் ஊர்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர் இத்தகவல் அறிந்த தேவதானப்பட்டி வனச்சரங்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வகையில் அதிகப்படியான வன ஊழியர்களை  பணியில் ஈடுபடுத்தினர் மேலும் கும்பக்கரை அறிவிப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என வனச்சரகர் டேவிட் ராஜன் தெரிவித்தார்.

    மேலும் சுற்றுலாப் பயணி ஷியம் வர்மன் கூறுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என சுற்றுலா பயணிகளுக்கு வனக் ஊழியர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்  சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டன இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் எந்தவிதமான  அசம்பாவிதமும்  நடைபெறாமல் வனத்துறை ஊழியர்கள் செயல்பட்டனர் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்களுக்கும் தேவனப்பட்டி வனச்சரக டேவிட் ராஜனுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    No comments