பெரியகுளம் ஸ்ரீ மகாசக்தி மகா காளியம்மன் திருக்கோவில் இடிப்பு-காவல்துறையினர் விசாரணை
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தண்டுபாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மகா காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது .
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையின் முகப்பு பகுதியில் அமைந்துள்ள திருக்கோவிலுக்கு பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினம்தோறும் சாமி தரிசனம் செய்து வந்தனர் .இந்நிலையில் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி மகா காளியம்மன் திருக்கோவிலை இடித்து வருகின்றனர். மேலும் முக்கிய சாலையில் அமைந்துள்ள திருக்கோவிலிலை இரவு நேரத்தில் திடீரென ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் இடித்ததால் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் கோவில் முன்பு குவிந்தனர் .இதையடுத்து தென்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுகுறித்து விசாரணை செய்தபோது ஸ்ரீ மகா சக்தி மகா காளியம்மன் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள் கோவிலை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக கட்ட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர் .
No comments