திருக்குவளை வட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை குறித்து விழிப்புணர்வு

நாகை மாவட்டம் திருக்குவளை வட்ட தலைமை மருத்துவமனையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திருக்குவளை வட்ட அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் திலீப் மணிகண்டன் தலைமை வகித்தார். முதுநிலை பொது மருத்துவர் ஞானகுரு முன்னிலை வகித்தார். 

சிறப்பு விருந்தினராக சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஜோஸ்மின் அமுதா கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்து கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு வழங்கினார் தொடர்ந்து 6 கர்ப்பணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. 


தொடர்ந்து உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக அங்கன்வாடி பணியாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் சுதா அருணகிரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா, அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவமனை செவிலியர்கள் அரசு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments