விருதுநகர் அருகே உள்ள தவசிலிங்காபுரத்தைச் சேர்ந்த சங்கிலி வீரன் இவரது மகன் ஸ்ரீராம் எட்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியனாக பணிபுரியும் வைரமுத்து என்பவருடன் குமரலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றனர்.
வைரமுத்து, ஸ்ரீராம் இருவரும் கோவிலுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் ஊரணி பகுதியில் வந்த போது வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்த வைரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பகுதியினர் ஸ்ரீராமை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments