திருவாரூர் நாகை புறவழிச் சாலையில் அமைந்துள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு வீர சைவப் பேரவையின் திருவாரூர் தஞ்சை மயிலாடுதுறை நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் இணைந்து நடத்திய மண்டல மாநாடு மாநிலத் தலைவர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக இந்த மாநாடு குத்து விளக்கு ஏற்றப்பட்டும் பசவர் சிலை திறப்புடனும் தொடங்கியது.இந்த மாநாட்டில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் பரவலாக வாழ்ந்து வரும் வீர சைவர் சமுதாயம் 10 பிரிவுகளாக உள்ளது.அவர்கள் அனைவரும் ஒரே சமுதாயம் என்பதற்கு அனைவரும் திருமண உறவுகளில் வேறுபாடு இல்லை எனவே எங்கள் சமுதாயத்தை ஒரே பேரில் வீரசிவர் என அரசாணை வெளியிட வேண்டும்.
மேலும் எங்கள் சமுதாயம் பிற்படுத்தப்பட்டோரில் 6 பிரிவும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் நான்கு பிரிவும் உள்ளது கல்வி அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ள எங்கள் சமுதாயத்திற்கு உரிய ஒதுக்கீடு செய்து எம்.பி.சி யில் 20% நீட்டிக்க வேண்டும்.வெளிப்படையான நேர்மையான சாதிவாரி கணக்கு நடத்தி அதன் விகிதாச்சாரப்படி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் மயிலம் குரு மகா சன்னிதானம் இருபதாம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பால்ய சுவாமிகள் மாநிலத் துணைத் தலைவர் குளோப் ஆறுமுகம் மாநில பொதுச் செயலாளர் பாலாஜி லோகநாதன் உள்ளிட்ட இரு நூறுக்கும் மேற்பட்ட வீர சைவர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

0 Comments