திருத்துறைபூண்டி பழைய பேருந்து நிலையம் முன்பு கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர்ந்து சாமானிய மக்கள் பயன்படுத்தும் கேஸ் விலை உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது ஏழை எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய கேஸ் விலை உயர்வு அதிகரித்திருப்பது கண்டனத்திற்குரியது ஆயிரம் ரூபாயை தாண்டி தற்பொழுது கேஸ் சிலிண்டர் விலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த விலை உயர்வால் ஏழைகளின் நடுத்தர மக்கள் முற்றிலும் பாதிப்படைகிறார்கள் சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அனைத்துக்கும் மத்திய அரசு விலை உயர்வு உயர்த்திக் கொண்டிருக்கிறது இந்த விலை உயர்வால் ஏழை எளிய முற்றிலும் பாதிப்படைகிறார்கள் இதன் பயனை அதானி அம்பானி குடும்பத்தினர் மட்டுமே பயனடைகிறார்கள் அவருடைய சொத்து மதிப்புகள் உயர்ந்து கொண்டே செல்கிறது ஏழை எளியவர்களின் சொத்து மதிப்பு தாழ்ந்து கொண்டே செல்கிறதாக கூறி நூதன முறையில் பழைய பேருந்து நிலையம் முன்பு கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நகர செயலாளர் கோபு தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மத்தியரசு அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, மாவட்ட குழு உறுப்பினர் சாமிநாதன், நகர மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், நகர குழு உறுப்பினர்கள் எம் பி கே பாண்டியன், ஏ கே செல்வம், கே கார்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments