சத்தியமங்கலத்தில் நகர திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக 23 வது வார்டுக்கு உட்பட்ட நகராட்சி அலுவலகம் அருகே சத்தியமங்கலம் திமுக நகர  செயலாளரும், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர். ஜானகி ராமசாமி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. சத்தி நகர அவைத்தலைவர் ஆர்.ஜோசப் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ரங்கசாமி கொடியேற்றி வைத்தார். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் 21 மற்றும் 26 வது வார்டுகளில் திமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இதையடுத்து சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி காவல் நிலையம் எதிரே உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி, ஆர்.எம்.பி. நகர் நகராட்சி துவக்கப்பள்ளி, கொளத்தூர் நகராட்சி துவக்கப்பள்ளி, மஹமுதியா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பயிலும் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு திமுக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் ஆர்.எம்.பி. நகர் துவக்க பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது. இதே போல் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு திமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் நகர கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் திரளாக திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments