கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் அரசு பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் டெஸ்க்குகளை வழங்கினார்

ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காசிபாளையம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவிகள் அமர்ந்து படிப்பதற்கு கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாடு நிதியில் இருந்து இருக்கைகள் மற்றும் டெஸ்க்குகளை முன்னாள் அமைச்சரும், கோபிச்செட்டிப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் அ.பண்ணாரி எம் எல் ஏ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, கோபிச்செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் வழக்கறிஞர் மௌதீஸ்வரன் , ஆசிரியர் வேலுச்சாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் , பேரூர் கழக செயலாளர் மணி ( எ ) சந்திரசேகர், எம். ஜி. ஆர் மன்ற செயலாளர் காளியண்ணன் , தலைமையாசிரியர் ஜேம்ஸ் பால்  மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், அஇஅதிமுக நிர்வாகிகள் ,  உறுப்பினர்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments