நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி கருணாவெளி மெயின் ரோட்டைச் சேர்ந்த ராஜுமுருகன் மகன் கிருஷ்ணராஜ் (23) கீழ்வேளூர் அருகே ஆழியூர் ஊராட்சி பாமினி தெருவை சேர்ந்த வீரக்குமார் மகன் நவீன்(19) நண்பர்களான இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி கீழ்வேளூர் அருகே பூலாங்குடி பஸ் நிறுத்தம் அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நவீனை கிருஷ்ணராஜ் கத்தியால் வெட்டி படுகொலை செய்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணராஜை சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராயக் கடத்தல் மற்றும் சாராய விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் கிருஷ்ணராஜ் மீது குண்டு தடுப்பு சட்டத்தின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை எஸ்பி ஜவகர் கலெக்டர் அருண் தம்புராஜுக்கு பரிந்துரை செய்தார். இதை அடுத்து கிருஷ்ணராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் கீழ்வேளூர் போலீசார் நாகை மாவட்ட சிறையிலிருந்த கிருஷ்ணராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர.


0 Comments