தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட அரண்மனை தெரு பகுதியில் தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் புதிதாக 25 லட்சம் மதிப்பீட்டு நகர் நல மையமும், வைத்தியநாதபுரம் பகுதியில் ரூபாய் 11, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாய விலை கடை அமைப்பதற்கான - பூமி பூஜை விழா நடைபெற்றது .
இந்த பூமி பூஜை விழாவினை திமுக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.நகர்மன்றதலைவர் சுமிதாசிவக்குமார் முன்னிலைவகித்தார்.திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ்,நகராட்சி ஆணையாளர் புனிதன்,சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது,சேகர்,நகராட்சி பொறியாளர் முருகன்,நகர அவைத் தலைவர் வெங்கடாசலம் ,நகரப் பொருளாளர் சுந்தரபாண்டி , நகர்மன்ற உறுப்பினர்கள் அப்துல்மஜீத் ,சரவணன், சுதா நாகலிங்கம் ,முகமது அலி ,ஜாகிராபானு அஜ்மல்கான், லட்சுமி,கிஷோர் பானு நூர் முகமது ,மதன்குமார், பால்பாண்டி, பவானி முருகன்,முருகேஸ்வரி, குமரன்,வெங்கடேசன்,திமுக வார்டு கழகச் செயலாளர் ஆர்.சக்திவேல், மற்றும் திமுக மாவட்ட , ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார். வைத்தியநாதபுரம் வி.ஆர்.பி நாயுடு தெருவை இணைக்கும் வகையில் புதிய பாலம் அமைக்க இடத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

0 Comments