தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் கீழ வடகரை ஊராட்சி பகுதியில் திமுக தலைவரும் தமிழ்நாடுமுதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கீழ வடகரை ஊராட்சிக்குட்பட்ட அழகர்சாமிபுரம், தெய்வேந்திரபுரம், ஸ்டேட்பேங்க்காலனி, ஆகிய பகுதிகளில் திமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள்வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கீழ வடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.திமுக கிளை கழக நிர்வாகிகள் இளங்கோவன், மொக்கப்பாண்டி, தவமணி,சுரேஷ்,ஆட்டோ ரவி, ரவிச்சந்திரன்,அஜீஸ், ராஜேஷ்,தீபக் கங்குலி,மனோஜ், சந்தோஷ்,உதயநிதி,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

0 Comments