சத்தியமங்கலத்தில் அருகே கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து... சாலையோரம் நின்றிருந்த தொழிலாளி காயம்...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் கரும்பு அறுவடை செய்யப்பட்டு லாரி மற்றும் டிராக்டர்களில் பாரம் ஏற்றி சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆலத்துக்கோம்பை பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. காலை சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு செல்வதற்காக சத்தியமங்கலம் - பெரிய கொடிவேரி சாலையில் சென்று கொண்டிருந்தது. கொமராபாளையம் கிராமத்தின் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரின் பின்புறம் அடுக்கப்பட்டு இருந்த கரும்பு பாரம் சாலையில் சரிந்ததால் சாலையோரம் நின்றிருந்த அப்பகுதியைச் சேர்ந்த பிளம்பர் ரமேஷ்(38)  என்பவர் மீது கரும்பு கட்டுகள் சரிந்து விழுந்ததால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயம்பட்ட ரமேஷை உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் காயம்பட்ட ரமேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 மக்கள் நேரம் இணையதளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments