உலக வன உயிரின நாளை முன்னிட்டு வனத்தீயைத் தடுத்து வன உயிரினங்களை காப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோடை காலத்தில் வனப்பகுதியில் ஏற்படும் வனத்தீயை கட்டுப்படுத்தி வன உயிரினங்களை காப்பது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள  தாளவாடி வனச்சரகத்தில் விழிப்புணர்வு பேரணி வனத்துறை சார்பில் நடத்தப்பட்டது. இதில் தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து 350க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் வனத்துறையுடன் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் துவங்கி தாளவாடி பஸ் நிலையம் வரை நடைபெற்ற பேரணியில் "வனத்தீயை தடுப்போம், வன உயிரினங்களை காப்போம்" என்று கோஷங்களை எழுப்பி, விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி மக்களிடம் விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்தினர். தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஸ் விழிப்புணர்வு பேரணிக்கு தலைமை தாங்கினார்.  தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கப்பன், வனவர் பெருமாள், வனப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் காட்டிற்குள் தீ விபத்துகள் ஏற்படும் போது அது எவ்வாறு அணைக்கப்படுகிறது என்பது குறித்த செயல்முறைகளை வனப்பணியாளர்கள் அதற்கான உபகரணங்களை வைத்து நேரடியாக செய்து காண்பித்தனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments