விருதுநகர் ரோசல் பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பாண்டியன் நகரில் அரசியல் கட்சியினரின் பொதுக் கூட்டம் , ஆர்ப்பாட்டம் ஆகியவைகள் பிரதான சாலையில் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கு காவல்துறை அனுமதி அளிக்ககூடாது என்றும்,அதே போல் திருச்சுழி ,காரியாபட்டி ,மல்லாங்கிணறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகளும்,ஆம்புலன்ஸ்,பஸ்கள்,ஆட்டோக்கள் ஆகியவைகளும் முதியவர்களும் , பெண்களும் இதனால் சிரமப்படுகிறார்கள் .என்றும்,விருதுநகர் பாண்டியன் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது எனவும் ,ஸ்ரீராம் லட்சுமி மகால் எதிர்புறம் உள்ள AA ரோட்டில் அரசியல்கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் அவர்களை சந்தித்து விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
உடன் ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் ,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராஜலட்சுமி , மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் பன்னீர் ,ஐ.டி பிரிவை சேர்ந்த நெல்சன்தாஸ் , சங்கர் சசி , மாவட்ட தொழிலாளர் அணி துனை அமைப்பாளர் மைக்கேல்ராஜ் , நிர்வாகிகள் ரோகிணி , மாரியப்பன் , காளிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments