தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு பஜார் ( 20 வார்டு)நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இலவச கழிப்பிட கட்டிடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வசூல் செய்யப்படுவதாகவும் இதனை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க கோரியும், அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆரம்ப சுகாதார நிலையம் இடிக்கப்பட்டு அதற்கான புதிய கட்டுமான பணி நடைபெற்று வருகிறது இப்பணியை விரைந்து முடிக்காததால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருவதாகவும் , நகராட்சி நிர்வாகம் சார்பில் கூடுதல் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இதனை கண்டித்து பாஜக நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் அப்போதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாஜகவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அங்கு வந்த நகராட்சி ஆணையாளர் ராஜாராம் இடம் தனது கோரிக்கையை மனுவை வழங்கி உடனடியாக இதற்கு தீர்வு காண கோரி கோரிக்கை விடுத்தார்... தங்களது கோரிக்கை மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஆணையாளர் தெரிவித்ததை எடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

0 Comments