ஓ.என்.ஜி.சி சார்பில் பொது மற்றும் கண் மருத்துவ முகாம்

கோட்டூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் மாபெரும் பொது மற்றும் கண் மருத்துவ முகாம் மதுரை மீனாட்சி மிசன்,தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவனை சேர்ந்த மருத்துவ குழு உதவியுடன்  நடைபெற்றது. நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்ற முகாமை கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன் தொடங்கிவைத்தார்.முகாமில் 496 பயனாளிகள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் இரத்த அழுத்தம் ,சர்க்கரை  தேவைபடுவோருக்கு  ஈ.சி.ஜி எடுக்கப்பட்டது. அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.பங்கேற்ற முதியோர்களுக்கு கைத்தடிகள்,கண்ணாடி தேவைபடும் சுமார் 205 பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.முகாமில் ஊராட்சி தலைவர்கள் சுஜாதா பாஸ்கரன் தமிழ்செல்வி வேல்முருகன்,திலகவதி சிவசுப்ரமனியன், தேவகி உதயகுமார்,ஓ.என்.ஜி.சி மருத்துவ அலுவலர் கனேஷ்குமார்  உற்பத்தி பிரிவு தலைவர் வில்சன் ஏரியா மேலாளர் பொது மேலாளர் சரவணன்,முத்துகுமார் ,நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மகேந்திரன்  துணைத்தலைவர் வனஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 

முகாமில் நல்லூர், களப்பால்,வாட்டார்,வெங்கத்தான்குடி,அக்கரைகோட்டகம், பைங்ங்காட்டூர்,பனை.யூர் போன்ற ஊராட்சிகளை சேர்ந்த ஐநூறுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.நடக்கமுடியாத முதியோர்களுக்கு 40 நபர்களுக்கு கைத்தடிகள் வழங்கப்பட்டது.முகாமை கார்த்திகேயன், முருகானந்தம் ஒருகினைத்தனர்.முகாமை ONGC க்காக கடலூரை சேர்ந்த முதியோருக்கான முதியோர் அமைப்பு ஏற்று நடத்தியது.



Post a Comment

0 Comments