திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு எவர்சில்வர் தட்டு,டம்ளர் வழங்கும் விழா

ஈரோடு மாவட்டம் ,சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , அரியப்பம்பாளையம் பேரூராட்சி சார்பில் தமிழக முதல்வரும், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் திருமதி மகேஸ்வரி செந்தில்நாதன் மற்றும் அரியப்பம்பாளையம் பேரூர் கழக  செயலாளர்  வழக்கறிஞர் ஏ .எஸ். செந்தில்நாதன்   பெரியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு மதிய சத்துணவு உண்பதற்கு தட்டு மற்றும் டம்ளர்கள் இனிப்புகள் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர்.தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள்  மற்றும் பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments