தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தென்கரை பேரூராட்சி பகுதிக்கு,சோத்துப்பாறை அணையில் இருந்து குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர் திட்டபணிகள் நடைபெறும் இடத்தினை உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு,ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.நிகழ்வின் தேனிவடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ்,துணைத் தலைவர் ராதா ராஜேஷ்,பேரூர் செயலாளர் பாலமுருகன்,பேரூராட்சி செயல் அலுவலர் மோகன் குமார் மற்றும் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகள்திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 Comments