பீகார் மாநிலத்தின் ஆளுங்கட்சி செய்தி தொடர்பாளர் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளித்ததற்கு எஸ்பிக்கு நன்றி தெரிவித்தார்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெளி மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறி பரவிய வீடியோவால் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பினார் இது பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதை அடுத்து பீகார் மாநிலத்தின் ஆளுங்கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் ரித்து ஜேசுவால் வட மாநில தொழிலாளர்களின் நிலையை கண்டறிய ஆய்வு மேற்கொண்டார்.

 விருதுநகர் மற்றும் சிவகாசி  சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்தவர் அவர்களின் பாதுகாப்பு மற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார் அதைத் தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பாகவும் வசதியுடன் இருப்பதையும் அறிந்த அவர் வட மாநில தொழிலாளர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதை புரிந்து கொண்ட அவர் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அவர்களை சந்தித்து வடமாநில தொழிலாளர்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதற்கு  நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா  மற்றும் மாவட்டச் செயலாளர் டேனியல் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments