மாற்றுத்திறனாளிகள் மற்றும் நரிக்குறவர்கள் இன பெண்களுக்கு வீட்டு உபயோகபொருட்கள் மற்றும் நவநாகரிக அணிகலன்கள் பயிற்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பங்கேற்பு

   

 விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி ஊராட்சியில் நபார்டு வங்கி நிறுவனம் சார்பாக வீட்டு உபயோக பொருள்களான பினாயில், சோப் ஆயில்,ப்ளீச்சிங் பவுடர், ஊறுகாய் ஊதுபத்தி,கம்ப்யூட்டர் சாம்பிராணி உள்பட பல வீட்டு உபயோக பொருட்களை வீட்டிலிருந்தே  தயாரிப்பது பற்றி  கடந்த ஒரு வார காலமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

 மேலும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்  வனப்பகுதியைச் சேர்ந்த மொட்டைமலை கிராமத்தைச் சேர்ந்த 30 நரிக்குறவர் இன பெண்களுக்கு நவநாகரிக அணிகலன்கள் செய்வது குறித்து  பயிற்சினையும்  நபார்டுதொண்டு நிறுவனம் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியின் நிறைவு விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிறைவு விழாவில் விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், நபார்டு  வங்கி மேலாளர் மற்றும் உமன் தொண்டு நிறுவன தலைவர்கள்,மாற்றுத்திறனாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில்  பயிற்சி முடித்த மாற்று திறனாளிகள் மற்றும் நரிக்குறவர் பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பயிற்சிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு , உடனடியாக தாங்களே  கையால் செய்த பாசிமணி மாலையை அணிவித்தனர்.

மேலும் விழாவில் பேசிய  மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசுகையில்.

 இந்த செய்முறை பயிற்சியினால் பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை தரமான முறையில் தயார் செய்து கொடுக்கலாம் என்றும்,அது மட்டும் இன்றி இப்பயிற்சியின் முக்கிய நோக்கமே பொருட்களை சந்தைப்படுத்துவது  என்றும், இந்த பொருட்களை தொடர்ச்சியாக சந்தைபடுத்துதல் வேண்டும் எனவும்,இப்போதைய சூழ்நிலையில் பொருட்களை சந்தைப்படுத்துவது தான் முக்கியம் என ஆலோசனை வழங்கினார்.மேலும் வாழ்க்கையில் வெற்றி என்பது கடினமாக உழைத்தால் தான் கிடைக்கும்  என மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார்.

Post a Comment

0 Comments