புஞ்சை புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா   வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கும்பாபிஷேக விழா  காலை நடைபெற்றது.

கடந்த 7ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது.இந்த நிகழ்வில்  இரவு மூன்றாம் கால யாக பூஜையில் மஹாபூர்ணாஹுதி  நடைபெற்றது. அதனை தொடர்ந்து  நான்காம் கால யாக பூஜையில் மகாபூர்ணாஹூதியுடன் மகா தீபாராதனை நடைபெற்று மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பரிவார மூல மூர்த்திகளுக்கும், ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  கோவிலை சுற்றிலும் திரண்டிருந்த பக்தர்கள் மீது  புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமிக்கு அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments