மாவட்ட ஆட்சியர் மிதிவண்டி ஒட்டி பேரணியில் பங்கேற்பு... மகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் கல்லூரி நடத்திய மஞ்சள் பை திட்ட ஓராண்டு நிறைவையொட்டிய விழிப்புணர்வு பேரணி...

திருவாரூர் அருகே உள்ள சேந்த மங்களத்தில் இயங்கிவரும்  நேதாஜி கல்வி குழுமம் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் தனியார் பள்ளி இணைந்து நடத்திய முதல்வரின் மஞ்சள் பை திட்ட ஓராண்டு நிறைவு மற்றும் அதற்கான வரவேற்பு மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்தி நடைபெற்ற சைக்கிள் பேரணியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.

இந்த சைக்கிள் பேரணியில் முதல்வரின் மஞ்சள்பை திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதை ஒட்டியும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை வலியுறுத்தும் வகையிலும் மேலும் நெகிழி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிற அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

இந்த சைக்கிள் பேரணி திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி திருவாரூர் நகராட்சி அலுவலகம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்றது.இதில் நகர் மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர் கீழக்காவாதுக்குடி ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயலட்சுமி கலைக்கோவன் உள்ளிட்ட நகர மன்ற பெண் உறுப்பினர்கள் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் பேரணியில் பங்குபெற்ற மாணவிகள் மஞ்சள் பையை சைக்கிளில் தொங்கவிட்டபடி விழிப்புணர்வை ஏற்படுத்திய வண்ணம் பயணித்தனர்.

Post a Comment

0 Comments