தேமுதிக ஒன்றிய,நகர,பேரூராட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு வடக்கு மாவட்ட ஒன்றிய, நகர,  பேரூராட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.கே.சுப்பிரமணியன்  தலைமை ஏற்று புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து உரையாற்றினார் .  ஈரோடு வடக்கு மாவட்ட  துணை செயலாளர் எம். வாசுதேவன் , மாவட்ட பொருளாளர் எஸ்.கே. ஜீவா சுப்பிரமணியம் , மாநில பொதுக்குழு உறுப்பினர் ப.சிவன்மூர்த்தி  ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மேலும் இக்கூட்டத்தில் மாநில பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மற்றும் சத்தியமங்கலம் நகர கழக செயலாளர் எஸ். கே.ராஜேந்திரன் , சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் கே.என்.சஜீத் ,  பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பி.கே.தங்கவேல்,  நம்பியூர் ஒன்றிய கழக செயலாளர் கே.பொன்னுச்சாமி ,  அந்தியூர் ஒன்றிய கழக செயலாளர் ஈ. சுதாகர் , தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் எஸ். சோமசுந்தரம், பெரிய கொடிவேரி பேரூர் கழக செயலாளர் ஏ. பெருமாள், கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் எஸ். கந்தசாமி, கோபி நகர கழக செயலாளர் ஜி.எஸ். மணிகண்டன், அம்மாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் செங்கோட்டையன், பவானிசாகர் பேரூர் கழக செயலாளர் கே. பாலன், அந்தியூர் பேரூர் கழக செயலாளர்  எஸ்.முனாப் பாய்    ,  சத்தி நகர பொருளாளர் ரெட்டி ஆறுமுகம்,  அமான் பாய் , முன்னாள் சத்தியமங்கலம் நகர கழக செயலாளர் கணேசன், சத்தியமங்கலம் ஒன்றிய கழக அவைத்தலைவர் எம்.கண்ணன், சத்தியமங்கலம் ஒன்றிய  கழக துணை செயலாளர் கே.எம்.தங்கவேல் , சத்தியமங்கலம் ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி கடம்பூர் மலைப்பகுதி பொன்னுசாமி, கே.என்.பாளையம் ஈஸ்வரன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments