தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் செவிலியர் கல்லூரியில் அகில உலக பெண்கள் தினம் மார்ச் 8 முன்னிட்டு பாலின சமத்துவத்திற்கான சமபங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது இந்த கருத்தரங்கிற்கு தமிழ் நாடு பெண்கள் இணைப்பு குழு மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர் சித்ரா தேவி தலைமை வகித்தார்.மேலும் இந்த கருத்தரங்கில் மத்திய மாநில அரசுக்கு பெண்கள் மீதான வன்முறைகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய மது உள்ளிட்ட போதைப் பொருட்களை தடை செய்து பூரண மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டம் ஏற்றி அமல் படுத்திட வேண்டும் ,அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக 50 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கிட வேண்டும்,அரசியல் அதிகாரத்தில் பெண்களுக்கு 50 சதவீத முன்னுரிமை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கில் அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அ கண்ணம்மா பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கே எஸ் குமார் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னமயில் பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதாசிவகுமார் தமிழ்நாடு பெண்கள் இனிப்பு குழு மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஸ்வரி ,சர்வோதிப் தொண்டு நிறுவனம் இயக்குனர் முனைவர் சகோ.சகாய சங்கீதா தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவை சேர்ந்த மல்லிகா பத்மாவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு மார்ச் 8 அகில உலக மகளிர் தின கருத்தரங்கில் கருத்துரை வழங்கினார் நிகழ்ச்சியில் அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 Comments