தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனம் JSW சார்பில் பல்வேறு இடங்களில் காற்றாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விளாத்திகுளம் அருகே கே. குமரெட்டையாபுரம் கிராமத்தில் காற்றாலை அமைக்கும் பணிக்காக குடியிருப்பு பகுதிகள் மற்றும் கோவில் வழியாக உயர் அழுத்த மின்கம்பங்கள் உயர் மின்னழுத்த கம்பிகள் கொண்டு செல்வதற்காக மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.. இப்பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தடுத்து நிறுத்தி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்டி அடித்தனர்... இந்நிலையில் இன்று காற்றாலை நிறுவனம், உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை எடுத்து கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை எடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

0 Comments