பெரியகுளம் கும்பக்கரை செல்லும் சாலை சீரமைப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி,இங்கு முக்கிய விசேஷ தினங்கள் விடுமுறை நாட்களில் தேனி மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்துவந்தனர்.

இந்நிலையில் பெரிய குளத்தில் இருந்து கும்பக்கரை அருவிக்கு செல்லும் பிரதான சாலை முதல் அடுக்கும் வளைவு வரையிலான ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சாலை சீரமைப்பு பணியினை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரின்,உதவி பொறியாளர் அனுசியா மற்றும் நெடுஞ்சாலைத்துறை  ஆய்வு மேற்கொண்டு பணிகளை தீவிர படுத்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.

பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய பெரியகுளம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு சுற்றுலாபயணிகள், விவசாயிகள், பொதுமக்கள்,நன்றி தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments