ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் உள்ள சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வனப்பகுதி சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், பாலிதீன் பொருட்களை வீசி செல்கின்றனர். யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் காகிதங்களை உட்கொண்டு உடல் உபாதைக்கு ஆளாகின்றன. இதைத் தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா அறிவுரையின் பேரில் ஆசனூர் வனச்சரக அலுவலர் சிவகுமார் தலைமையில் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் வரையிலும், கொள்ளேகால் சாலையில் அரேப்பாளையம் முதல் மாவள்ளம் பிரிவு வரை சாலையோர வனப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்கள் கண்ணாடி பாட்டில்கள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளி மாணவர்கள், ஈரோடு தனியார் கல்லூரி மாணவ மாணவியர், பயோடைவர்சிட்டி கன்சர்வேஷன் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இதில் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் பாட்டில்கள் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பாலித்தீன் பேப்பர்கள் சேகரிக்கப்பட்டது. மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

0 Comments