விருதுநகரில் சர்வதேச மகளிர் தின விழாவினை முனைட்டு கூரைக்குண்டு பஞ்சாயாத்து தலைவர் செல்வி தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜ சுலோச்சனா அவர்கள் கலந்து கொண்டு பேசும்பொழுது இந்த நாடு பெண்களுக்கென்று படைக்கப்பட்ட நாடு என்றும், என்னுடைய முன்னேற்ற வாழ்க்கைக்கு என்னுடைய தாய் தான் ஊன்றுகோலாக இருந்தார். ஆகையால் தாங்களும் தங்களின் பெண் குழந்தைகளின் வாழ்க்கைக்கு கல்வியை கொடுத்து சமுகாயத்தில் அவர்கள் மதிக்ககூடியவர்களாக அவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும், பேசினார்.
மேலும் பேசும்பொழுது குழந்தை திருமணத்தை முற்றிலும் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் 18 வயது பூர்த்தி அடைந்தபின்பு அவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.
18 வயதுக்கு கீழ் உள்ள பெண்குழந்தைகளுக்கு திருமணத்தை நடத்தி வைப்பது சட்டபடி குற்றமாகும் என்றும், அவ்வாறு நடக்கும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது காவல்துறையினரை பெற்றோர்கள் குறை கூறுவது தவறு என்றும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்வின்போது ஜேசிஐ சார்பாக சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்க்கான விருதை கூரைக்குண்டு பஞ்சாயத்து தலைவர் செல்விக்கும், சிறந்த சமூக சேவகர் விருது மாரிக்கனி என்பவருக்கும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வின்போது கூரைக்குண்டு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கார்த்தீஸ்வரி உடனிருந்தார்.மேலும் இந்த நிகழ்சியில் கூரைக்குண்டு பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

0 Comments