தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் மாசிமகம் பெளர்ணமி கிரிவலம் நடைபெற்றது தேனிமாவட்ட த்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் பக்தியுடன் கிரிவலம் வந்து கைலாசநாதரை வழிபட்டு வந்தனர் வருகை தந்த பக்தர்களுக்கு பெரியகுளம் பார்வதிதியேட்டர் உரிமையாளர் KAR குணசேகர் சார்பாக சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது. கைலாசநாதருக்கும் பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக செய்திருந்தனர்

0 Comments