முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பிறந்த ஆறு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் குழந்தை பெட்டகம் அமைச்சர் ரகுபதி வழங்கினார்

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பிறந்த ஆறு  குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் குழந்தை பெட்டகம் வழங்கும் நிகழ்வு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்து ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு தங்க மோதிரம் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி நகர கழக செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஹரி விமலாதி அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் கணேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் கட்சியின் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments