விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து இரண்டு தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்றது. இந்த பட்டாசு ஆலையில் 40 அறைகள் உள்ள நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கன்னிச்சேரி மற்றும் கட்டனார் பட்டியைச் சேர்ந்த முத்துப்பான்டி , கருப்பையா ஆகிய இருவரும் பேன்சி ரக பட்டாசுக்கு திரி சுற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 அப்போது பட்டாசு திரியில் தீடீரென்று உராய்வு ஏற்பட்டு  வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் திரி சுற்றும் பணியில் ஈடுபட்டு இருந்த இரண்டு தொழிலாளர்கள் 80 சதவீத தீ காயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ஈடுபட்டனரர்.

Post a Comment

0 Comments