பிரசித்திப் பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய சித்ரா பௌர்ணமி பெருவிழா பந்தக்கால் முகூர்த்தத்துடன் துவங்கியது


நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள எட்டுக்குடியில் பிரசித்திப் பெற்ற முருகனின் ஆதிபடை வீடான  ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. சத்ரு சம்ஹார ஸ்தலம் மற்றும் வால்மீகி சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடம் என  பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்வாலயத்தில் உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு சித்ரா பௌர்ணமி பெருவிழா 56 மணி நேர இடைவிடாத பால் அபிஷேகம் மற்றும் ரதகாவடி ஊர்வலத்துடன் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்‌. அதன்படி இந்தாண்டு சித்திரா பௌர்ணமி பெருவிழா எதிர்வரும் ஏப்ரல் 26ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்குகிறது. விழாவின் முக்கிய திருவிழாவான  தேரோட்டம் மே. 4ம்  தேதியும் சித்ரா பௌர்ணமி பெருவிழா மே.5ம் தேதி என 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு  பந்தகால் மூர்த்தம் இன்று வெகு விமர்சையாக  நடைபெற்றது.ஆலய வளாகத்தின் முகப்பு பகுதியில் பந்தக்காலுக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர்,பந்தகால் பூமியில் நடப்பட்டது‌.தொடர்ந்து சிறப்பு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் இந்தாண்டு சித்ரா பௌர்ணமிக்கு சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான  பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,அது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலர் பி.எஸ்.கவியரசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பக்தர்கள் சிரமமின்றி முருகப்பெருமானை தரிசனம் செய்ய மேற்கொள்ளப்பட‌ வேண்டிய  அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடு பணிகள் குறித்து பேசப்பட்டது.

Post a Comment

0 Comments