புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி பெரிய சாத்தனூர் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட கெங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் கொண்டுவருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை முதற்கால யாக பூஜை, கணபதி வழிபாடு, கலச பூஜை, யாக பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ கெங்கேஸ்வரர், கணபதி, சுப்ரமணியர், காலபைரவர் மற்றும் ஆதி பொம்மக்கா சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் விண்ணப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

0 Comments