திம்பம் மலைப்பாதையில் மக்காச்சோள மூட்டைகள்பாரம் ஏற்றிச் சென்றலாரி கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் -  மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் இருந்து மக்காச்சோள மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி நாமக்கல் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுனர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி சாலையோரம் கவிழ்ந்ததால் லாரியில் இருந்த மக்காச்சோள மூட்டைகள் கீழே கொட்டி சிதறின. சாலையோரம் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இது குறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். லாரியிலிருந்து கீழே விழுந்து சிதறிய மக்காச்சோள மூட்டைகள் மற்றொரு லாரியில்  பாரம் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments