சங்கரன்கோவிலில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆளுநர் காரல் மார்க்ஸ் குறித்து கூறிய கருத்துக்கு எதிராக தமிழக முழுவதும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து  போராட்டங்கள் நடைபெற்று, வருகிறது அந்த வகையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக ஆளுநரை கண்டித்து கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழக ஆளுநர் காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு பேசியதை கண்டிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்துள்ளனர்.

Post a Comment

0 Comments