சத்தியமங்கலத்தில் முதல்முறையாக ஒரு கோடி சிவலிங்க ஆலயம் கும்பாபிஷேக விழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி சிக்கரசம்பாளையம் கிராமத்தில் தமிழ்நாட்டில் முதல்முறையாக 4 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

அதனை தொடர்ந்து  விழாவான  சிவனடியார்கள் தானமாக கொடுத்த ஒரு லட்சம் சிவலிங்கம், 108 அஷ்டோத்திர லிங்கம், 1008 சகர்ஸரலிங்கம், நர்மதா நதியில் இயற்கையாக கிடைத்த பானலிங்கம், பூமிக்கு அடியில்  இயற்கையாக கிடைத்த சிவலிங்கம் ,சதுரகிரி இருந்து கொண்டு வந்த சிவலிங்கம் ,கேதர்நாத்தில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கம், காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கம், வாரணாசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கம் இவற்றுடன் சிவனடியார் அறக்கட்டளை மூலம் பெறப்பட்ட சிவலிங்கங்களை கொண்டு  பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் விநாயகர் சிலை முருகன் சிலை ஆகியவையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சிவலிங்க பூஜை நடைபெற்றது சனி பிரதோஷம்  விழாவன  முதல் கால பூஜை மாலை 6.15 மணிக்கு இரண்டாம் காலை பூஜை இரவு 9.25மணிக்கு மூன்றாம் காலை பூஜை நள்ளிரவு 12.35மணி அளவிலும் நான்காம் பூஜை அதிகாலை 3.45 மணி அளவில் நடைபெற்றது.

பக்தருக்கு தொடர்ந்து   அன்னதானம் வழங்கப்பட்டது.பூஜையில்  கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஐந்து முக ருத்ராட்சம் இலவசமாக  வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் மற்றும் அதன் வட்டார பகுதியில் சேர்ந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து  விழாவை வெகு விமர்சியாக கொண்டாடினார். 

இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் 3/4 அடி உயரம்,9இன்ச்  முழுவதும் கருங்கல்லால் ஆன சிவலிங்கம் சிலையை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சத்தியமங்கலம் சிவனடியார் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments