அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து திருச்சி செல்லும்  TN 57 N 2576 என்ற பதிவு எண் கொண்ட அரசு பேருந்து பெரியகுளம் அருகே சருத்துபட்டி கருப்புசாமி கோவில் அருகில்   திருச்சி நோக்கிய  சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் சென்ற TN 60 AH 3775 என்ற பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது .இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் படுகாயம் அடைந்ததாகவும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.  விபத்து குறித்து தகவல் அறிந்த தென்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த இருவர் பேச முடியாத நிலையில் இருப்பதால் அவர்கள் பற்றிய பெயர் விபரம் ஏதும் தெரியவில்லை தகவல் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments