அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் புரளியை கிளப்பி விடுகிறார்கள்.நன்னிலத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி பேச்சு

சமூக நீதி பாதுகாப்பு மாடல் விளக்க தொடர் பிரச்சார பயண பொதுக்கூட்டம் தமிழக முழுவதும் திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் மேடையில் ஏறி வீரமணிக்கு பொன்னாடையை கொடுத்தார் அப்போது அவர் வைத்திருந்த பொன்னாடையை முதியவருக்கு போட்டு நன்றியை தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய திராவிட கழகத் தலைவர் வீரமணி பேசியதாவது...

நம்ம ஊரில் எதிர்க்கட்சி என்னனா எதஇவர் மேல் அவர் குறை சொல்கிறார் அவர் மேல் இவர் குறை சொல்கிறார் திமுகவுக்கும் அதன் கூட்டணிக்கும் அதிமுகவை பற்றி பேச அதிக வேலை கிடையாது. நாங்கள் எதுவும் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டிய வேலை கிடையாது.பன்னீர்செல்வம் எடப்பாடி பற்றி என்ன சொல்கிறார் எடப்பாடி பன்னீர்செல்வத்தை பற்றி என்ன சொல்கிறார் இவங்களைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள். 

இதற்கெல்லாம் காரணம் பிஜேபியின் பொம்மலாட்டம் தாய் கழகம் என்பதால் எங்களுக்கும் பாசம் இருக்கும் இல்லையா அந்தப் பாசத்திற்காக சொல்கிறோம் நீங்கள் முதலாவதாக வாடகை குதிரை ஆகாதீர்கள்.எம்.ஜி.ஆர் எல்லாம் உருவாக்கிய இந்த இயக்கத்தை லேடியா மோடியானு தைரியமா அந்த அம்மா கேட்டாங்க அப்படி இருக்கிற இயக்கத்தை நீங்கள் அடமான பொருளாக ஆக்கிடாதீங்க.அடமானம் வச்சா உங்களுக்கு தெரியும் டெல்லியில் அடமானம் வச்சுட்டாங்க அடமானத்தை மீட்பதற்கு முயற்சி செய்யுங்கள் ரொம்ப நாள் வட்டியானால் என்ன பண்ணுவோம் அடமான பொருளை அப்படியே போகட்டும்னு இருப்போம் அந்த சூழ்நிலையை தடுப்பதற்கு நாங்கள் இருப்போம்.இன்னைக்கு உங்களை காப்பாற்றுவதும் இங்க எந்த எதிர்க்கட்சின்னு சொல்றதுக்கு இங்க ஆள் இல்லை.

2014 ஆம் ஆண்டு எதை நம்பி இங்கு பிஜேபிக்கு ஓட்டு போட்டார்கள் மோடி குஜராத் மாநிலம் வளர்ச்சி மாநிலம் அதுவும் உங்ககிட்ட ஹிந்தில சொன்ன உடனே ஒன்னும் புரியல நம்ம ஆளுங்க சொன்னாங்க குழாயில தண்ணி வரலையா மோடிக்கு போன் பண்ணுங்க உடனே உங்களுக்கு கபார்னு தண்ணி வரும். 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வங்கி கணக்கில் 15 லட்ச ரூபாய் உங்கள் ஒவ்வொருவரின் கணக்கிலும் பொத்து பொத்துனு விழும் வாங்கி வச்சீங்க.

லட்சுமி வந்து கதவை தட்டுவா கவலப்படாதீர்கள் அப்படி என்று சொன்னார்.லட்சுமி கதவ தட்டுனாளா இல்லையா என்பதை விட லட்சுமி விலாஸ் பேங்க் காணாமல் போய்ட்டு.அதுதான் மிச்சமே தவிர வேறு எதுவும் கிடையாது இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைக்கு சொன்னதை செய்வோம் செய்வதையே சொல்வோம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.அமைதி பூங்காவாக  இருந்த தமிழ்நாட்டில்  இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென்று கிளப்பி விட்டு விட்டார்கள் என்னவென்றால் பீகாரில் இருந்து வந்து விட்டார்கள் வட நாட்டிலிலிருந்து வந்து விட்டார்கள் இது ஆட்சிக்குப் பெருமை ஸ்டாலினுக்கு பெருமை முதல்வருக்கு பெருமை இதை  எப்படியாவது தடுக்க வேண்டும் என்று ஐயோ இந்திக்காரர்களே பீகார் காரர்களே உங்கள் கழுத்தை எல்லாம் வெட்டுகிறார்கள் அங்கே  நீங்க வேலைக்கெல்லாம் செல்ல முடியாது என்று ஒரு பெரிய புருடா வை கிளப்பி விட்டு விட்டார்கள் ஆனால் இது எத்தனை நாளைக்கு நிற்கும் உடனடியாக அதை வெளியாகிவிட்டது இதை வேற யாரும் செய்யவில்லை பிஜேபி ஆர் எஸ் எஸ் அவர்கள் எந்த லெவலுக்கு  வேண்டுமானாலும் கீழே இறங்குவார்கள் என கூறினார்.

Post a Comment

0 Comments