ஊத்தங்கரை அதியமான் கலை கல்லூரியில் இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சி

 


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிருஷ்ணகிரி நேரு யுவகேந்திரா சார்பில் இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை உதவி அலுவலர் அப்துல் காதர் தொகுத்து வழங்கினார்.இளைஞர் நல அலுவலர் பிரேம்குமார் உரையாற்றினார். இதில் கல்லூரி முதல்வர் சீனி திருமால் முருகன் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் செயலாளர் ஷோபா திருமால் முருகன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் செல்லக்குமார் MP பங்கேற்றார். பின்னர் கல்லூரி மாணவர்களின் இளைஞர் பாராளுமன்றம் நடத்தப்பட்டது. இதில் சபாநாயகராக இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி யுவராணி பாராளுமன்ற ஆளுங்கட்சி உறுப்பினராக ப.அனிதா.ப .யோக சினிஎதிர்க்கட்சி உறுப்பினர்களாக ஹேமலதா பூவரசி வனஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments