பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி எம்.எல்.ஏ அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்,பரிசுகள் வழங்கினார்


ஈரோடு மாவட்டம் ,  பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனையம்பள்ளி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்  அ.பண்ணாரி .எம்.எல். ஏ. கலந்து கொண்டு  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி சிறப்பித்தார். உடன் பவானிசாகர் தெற்கு ஒன்றிய  செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி , பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.பழனிச்சாமி , பனையம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாகேந்திரன் , கணக்கம்பாளையம் பழனிச்சாமி  மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள், பள்ளி மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments