குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க எம்எல்ஏ சரவணகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

 


தேனி மாவட்டம்,  பெரியகுளம்  ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட  ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும்  நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்  பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது. பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல் ,உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை ஆகியோர்  முன்னிலை வகித்தனர் . இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன் ,விஜயமாலா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சில்வார்பட்டி பரமசிவம் , டி.வாடிப்பட்டி தங்கராசு ,குள்ளப்புரம் மஞ்சுளாதேவி , பொம்மிநாயக்கன்பட்டி சம்சுல் குதா ,வடபுதுபட்டி அன்னபிரகாஷ் , எருமலைநாயக்கன்பட்டி  பால்ராஜ் ,மேல்மங்கலம் நாகராஜ் ,சருத்துப்பட்டி சாந்தி , ஜல்லிக்கட்டு கண்மணி ,ஜெயமங்களம் அங்கம்மாள் , கீழவடகரை செல்வராணி ,முதல்லக்கம்பட்டி பிரபா மருதுபாண்டி , எ.வாடிப்பட்டி ஜெயராம் , அழகர்நாயக்கன்பட்டி கோட்டையம்மாள் , ஜி.கல்லுப்பட்டி மகேஸ்வரி ,எண்டபுளி சின்ன பாண்டியன், லெட்சுமிபுரம் ஜெயமணி சந்திரன் ஆகிய 17 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர்கள்  பாண்டியராஜ் , செல்லப்பாண்டி , பிச்சைமணி , லெனின், மீனா, நந்தினி, ஜெயபாண்டியன், கணபதி, வீரபத்திரன்,  மணிகண்டன், கோபால் , கோபாலகிருஷ்ணன் , உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில்,  குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இதில்  குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலர்கள், ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments