தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக புற காவல் நிலையம் அமைப்பது ,சுற்றுச்சுவர் அமைப்பது மற்றும் தரம் உயர்த்தி மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன .சுமார் ஒரு கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கி பணிகள் நடைபெற்று வருகின்றன .பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்திற்கு தினம்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன.புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது .புதிய பெரியகுளம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பணிகள் தொடங்கிய நாள் முதலே தாய்மார்கள் பாலூட்டும் அறையை தனியார் ஒப்பந்ததாரர் அவரது அலுவலகம் மற்றும் பொருட்கள் வைப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சிக்குட்பட்ட வணிக வளாகங்கள் இருக்கும் நிலையில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை தனியார் ஒப்பந்ததாரர் பயன்படுத்தி வருவதால் ஏராளமான தாய்மார்கள் மிகவும் அவதிக்குள்ளாவதாகவும் மேலும் பெண்கள் முகம் சுளிக்கும் வண்ணம் உள்ளது .

0 Comments